
இன்றைய ராசி பலன்கள் 02/01/2021
மேஷம்
கொடுத்த வாக்கை காப்பாற்றும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். அந்தஸ்து உயரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. பண வரவு திருப்தி தரும்.
ரிஷபம்
ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணை புரியும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழகிய சிலருக்காக கணிசமான தொகையைச் செலவிட நேரிடலாம். நீண்ட நாட்களாக நினைத்த உறவினர் ஒருவரின் சந்திப்பு கிட்டும்.
மிதுனம்
நட்பு வட்டம் விரிவடையும் நாள். பொதுவாழ்வில் மதிப்பும், மரியாதையும் உயரும். தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும். இல்லம் தேடிவரும் நல்ல தகவல்களால் உள்ளம் மகிழ்வீர்கள். அரசு வழி அனுகூலம் உண்டு.
கடகம்
வருமானம் இருமடங்காகும் நாள். உற்றார் உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். உடன்பிறப்புகள் வழியில் உள்ளம் மகிழும் சம்பவமொன்று நடைபெறலாம். தொழில் வளர்ச்சி அதிகரிக்கும்.
சிம்மம்
ஒற்றுமை பலப்படும் நாள். வாழ்க்கை தேவைகளை பூர்த்திசெய்து கொள்வீர்கள். நண்பர்களால் அன்புத் தொல்லைகள் ஏற்படலாம். பாதியில் நின்ற கட்டிடப் பணியை தொடரும் எண்ணம் உருவாகும்.
கன்னி
கனவுகள் நனவாகும் நாள். நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்த ஒருவரின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள். நண்பர்கள் உங்கள் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவர். வெளியூர் பயணமொன்றால் வரவு கிட்டும்.
துலாம்
உத்தியோக வாய்ப்புகள் உறுதியாகும் நாள். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ் கிடைக்கும். கடன் பாக்கிகளை நாசூக்காக பேசி வசூலிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
விருச்சகம்
மனையில் மங்கல ஓசை கேட்க வழிபிறக்கும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தியொன்று வந்து சேரலாம். இடம், பூமியால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
யோசித்து செயல்பட வேண்டிய நாள். எடுத்த காரியத்தை முடிக்க பெரும் பிரயாசை எடுக்க நேரிடலாம். வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாகனங்களில் செல்லும் பொழுது கூடுதல் கவனம் தேவை.
மகரம்
சான்றோர்களின் சந்திப்பு கிட்டும் நாள். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டு. தந்தை வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. வரவேண்டிய பணவரவுகள் வந்துசேரும்.
கும்பம்
கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழும் நாள். தேங்கிய காரியங்களை துரிதமாக செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய எடுத்த முயற்சி வெற்றி பெறும். சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும்.
மீனம்
பிள்ளைகளால் பெருமை ஏற்படும் நாள். வரவிற்கேற்ற செலவுகள் ஏற்படும். திட்டமிட்ட பயணங்களில் திடீர் மாற்றங்களைக் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.