நேற்று அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

நேற்று அதிகளவான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

நேற்றைய தினம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளானோாில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் தொிவித்துள்ளது.

உள்நாட்டில் கண்டறியப்பட்ட 555 தொற்றாளர்களில் 192 பேர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதோடு 127 பேர் கம்பஹ மாவட்டத்திலும், 61 பேர் களுத்துறை மாவட்டத்திலும் பதிவாகியுள்ளனர்.

ஏனைய 175 பேர் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் பதிவாகியுள்ளனர்.