
இன்றைய ராசி பலன்கள் 05.01.2021
மேஷம்
யோகமானநாள். எடுத்த காரியம் இனிதே முடிவடையும் நாள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளொன்றை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. கௌரவம், அந்தஸ்து உயரும். பயணத்தால் பலன் கிடைக்கும்.
ரிஷபம்
திறமைகள் பளிச்சிடும் நாள். தெய்வீக சிந்தனை மேலோங்கும். உத்யோக முயற்சிகைகூடும். பிரியமானவர்களுடன் இருந்த பிரச்சினைகள் அகலும். தந்தை வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.
மிதுனம்
இன்றைய ராசி பலன்கள சக ஊழியர்களால் சிறு சிரமங்கள் ஏற்பட்டு சரியாகும். இளைஞர்களுக்கு எதிர்பார்த்ததை விட வெற்றி வாய்ப்பு கூடும். தொட்டது துலங்கும். நண்பர்களுடன் வருத்தம் வரலாம்.
கடகம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். பணநெருக்கடி உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகள் வந்து நெருக்கடியைக் கொடுக்கலாம். சோர்வு அதிகரிக்கும். உத்யோக மாற்றம் உறுதியாகலாம்.
சிம்மம்
எதிர்ப்புகளைச் சமாளித்து ஏற்றம் காண வேண்டிய நாள். வியாபாரம், தொழில் சம்மந்தமாக புதிய நபர்களைச் சந்திக்க நேரிடும். தேகநலன் சீராக ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துவது நல்லது.
கன்னி
கூட்டாளிகளால் கூடுதல் நன்மை கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் வந்து சேரலாம். வீடு, மனை வாங்க மற்றும் விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும்.
துலாம்
சொத்துகளால் ஆதாயம் ஏற்படும் நாள். உற்றார், உறவினர்களின் உதவி கிட்டும். சுபகாரிய பேச்சுகள் முடிவாவதற்கான அறிகுறிகள் தோன்றும். வரவு திருப்தி தரும். தொழில் வளர்ச்சி மேலோங்கும்.
விருச்சகம்
மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெற்று மகிழ்ச்சி கூடும் நாள். தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிக்கு உடனிருப்பவர்கள் உறுதுணைபுரிவர். வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர்.
தனுசு
சிலருக்கு வாடிக்கையாளர்களால் சந்தோஷங்கள் ஏற்படக்கூடும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். பயங்கள் நீங்கும். உற்சாகமான நாள். முயற்சிகள் வெற்றிகரமாக
மகரம்
உங்களின் பெருந்தன்மையால் தொல்லைகள் நீங்கும்.
சகோதரி மூலம் எதிர்பார்த்த விஷயம் வெற்றியாகும்.
நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு
கும்பம்
அமைதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைக்க வேண்டிய நாள். நேற்றைய சேமிப்பு இன்றைய செலவிற்கு கைகொடுத்துதவும். திடீர் பயணமொன்றால் வழக்கமான பணிகளை மாற்றியமைப்பீர்கள்.
மீனம்
திருமண தடை அகலும் நாள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தொலைபேசி வழியில் தொழில் வளர்ச்சிக்கு நல்ல தகவல் வந்து சேரும். காலையில் வந்த வரவொன்றை மாலையில் பொருளாக மாற்றுவீர்கள்.