
லண்டன் வீதியோர விருந்தில் ஏற்பட்ட மோதலில் 22 பொலிஸார் காயம்!
தலைநகரின் தெற்கில் சட்டவிரோத வீதியோர விருந்து நிகழ்வினை கலைக்க முயன்ற போது ஏற்பட்ட மோதலில், 22 அதிகாரிகள் காயமடைந்ததாகவும், அவர்களின் வாகனங்கள் சேதமடைந்ததாகவும் லண்டனில் உள்ள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரிக்ஸ்டனில் (Brixton) நடந்த ‘உரிமம் பெறாத இசை நிகழ்ச்சியில்’ சத்தம் மற்றும் வன்முறை தொடர்பான புகார்களை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து கூட்டத்தை கலைக்க முயன்ற போதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரண்டு அதிகாரிகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாவும், நான்கு பேர் மோதல்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் துரத்தப்படுவதும், வாகனங்கள் அழிக்கப்பட்டதும் போன்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இந்த கலக காரர்களை உட்துறை செயலாளர் பிரிதி படேல் முற்றிலும் மோசமானவர்கள் என விபரித்துள்ளார்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி கணிசமான எண்ணிக்கையிலான பெரிய விருந்து நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில், மான்செஸ்டரில் பொலிஸார் சட்டவிரோத நடன விருந்தினை தடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று கூறினர்.