சமுத்திரத்தில் கலந்துள்ள முகக்கவசங்கள்..!

சமுத்திரத்தில் கலந்துள்ள முகக்கவசங்கள்..!

1.5 பில்லியன் அளவான முகக்கவசங்கள், கடந்த ஆண்டில் சமுத்திரத்தில் கலந்துள்ளதாக சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

அந்த முகக்கவசங்களின் எண்ணிக்கையானது 5,000 தொன் அளவிலான எடையாகும் என அந்த அதிகார சபையின் முகாமையாளர் பேராசிரியர் டர்னி பிரதீப் குமார தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்களுக்கும், தனிநபர்களுக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும்.

எனவே முகக்கவசங்களை முறையான வகையில் அழிக்க வேண்டுமென அந்த அதிகார சபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.