
21 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புகிறது அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய விமானநிறுவனம்
கொரோனா தொற்று காரணமாகஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கம் காரணமாக உலகளாவிய ரீதியில் பல நிறுவனங்கள் ஊழியப்படையை குறைத்து வருகின்றன.
அந்தவகையில் அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான குவான்டஸ் 6,000 பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும் 15,000 ஊழியர்களுக்கு இந்த ஆண்டு இறுதி வரை கட்டாய விடுப்பு அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அலன் ஜோய்ஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். ஒரு வருடத்திற்கு 100 விமானங்களை இயக்கப்போவதில்லை என்றும் குவான்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.