இன்றைய ராசி பலன்கள் 10/01/2021

இன்றைய ராசி பலன்கள் 10/01/2021

மேஷம்

விரோதங்கள் ஏற்படும் நாள். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்க செலவு செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

ரிஷபம்

கொள்கைப் பிடிப்போடு செயல்படும் நாள். வாழ்க்கைத்தரம் உயர நண்பர்கள் வழிகாட்டுவர். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது, வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்

நினைத்தது நிறைவேறும் நாள். நீடித்த நோய் அகலும். பழைய வாகனத்தைப் பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் புகழ்
பெறுவீர்கள்.

கடகம்

பொருளாதார நிலை உயரும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். இளைய சகோதரத்தின் வழியில் உதவிகள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளால் நன்மை உண்டு.

சிம்மம்

திறமைகள் பளிச்சிடும் நாள். திடீர் தனவரவு உண்டு. உத்தியோக நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். நண்பர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்றைச் செய்து முடிப்பீர்கள்.

கன்னி

கொடுக்கல் - வாங்கல்கள் ஒழுங்காகும் நாள். எப்படி நடக்குமோ என்று நினைத்த காரியம் நல்ல விதமாக நடைபெறும். குடும்பத்தில் பெரியவர்களின் யோசனை நன்மை தரும்.

துலாம்

மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும் நாள். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் எண்ணம் மேலோங்கும். புண்ணிய காரியங்களில் நாட்டம் செல்லும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழும் வாய்ப்பு உண்டு.

விருச்சகம்

ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் கருதிப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.

தனுசு

பக்குவமாகப் பேசிப் பாராட்டுகளைப் பெறும் நாள். விலைஉயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மன நிம்மதிக்காக ஆலயத்தை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.

மகரம்

மனக்குழப்பம் அகல அனுபவஸ்தர்களின் ஆலோசனை கைகொடுக்கும் நாள். மாற்றுக் கருத்துடை யோர் மனம் மாறுவர்.தந்தை வழி உறவில் ஏற்பட்ட விரிசல் மறையும். ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்

விரயங்கள் மேலோங்கும் நாள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபமாகப் பேசிவிட்டுப் பிறகு வருத்தமடைவீர்கள். உத்தியோக மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். மருத்துவச் செலவு உண்டு.

மீனம்

பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணையும் நாள். வாழ்க்கைத்துணை வழியே மகிழ்ச்சி தரும் செய்தியொன்று வந்து சேரும். தொழில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.