
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம் -கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு
கொரோனா தொற்றை அடுத்து நீண்டகாலமாக மூடப்பட்டு தற்போது பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டநிலையில் பெற்றோர் அரசாங்கத்திற்கு பாராட்டுத் தெரிவித்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டநிலையில் தொடர்ந்தும் செயற்படும் வகையில் அனைவரும் பொறுப்புடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
முதலாம் தவணைக்கான ஆரம்ப தினத்தில் ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியரின் வருகை திருப்திகரமாக அமைந்துள்ளது.
மேல் மாகாணத்திலும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களிலும் இயங்கும் பாடசாலைகளைத் தவிர ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த பாடசாலைகள் நேற்று முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டன.
நேற்று மாணவர் வருகை 51 சதவீதமாகவும், ஆசிரியர் வருகை 58 சதவீதமாகவும் இருந்தது என்றும் செயலாளர் குறிப்பிட்டார்.