
விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம்
டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகர் பகுதிக்கு வந்த விவசாயிகள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளானர்.
அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு முன்னதாகவே டெல்லிக்குள் நுழைந்ததாகக் கூறி மேற்படி பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று டெல்லியில் விவசாயிகள் இணைந்து மாபெரும் ட்ராக்டர் பேரணியை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது