
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,855 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, மற்றும் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,20,048 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18,855 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் புதிய பாதிப்பு முந்தைய நாளை விட 61 சதவீதம் அதிகரித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 163 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,54,010 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,03,94,352 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 20,746 பேர் குணமடைந்துள்ளனர்.
சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது 2 லட்சத்திற்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,71,686 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் 29,28,053 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.