புதுடெல்லி - இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு

புதுடெல்லி - இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு

புதுடெல்லியில் அமைந்துள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் தூதரகம் அருகே ஜிண்டால் வீட்டின் அருகே இன்று மாலை 5.05 மணியளவில் குறைந்த சக்தி கொண்ட குண்டு வெடித்தது.

இதில் யாருக்கும் காயமும் ஏற்படவில்லை, அதுபோல் சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.