நிலஅதிர்வு குறித்து ஆராய அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விஜயம்...!

நிலஅதிர்வு குறித்து ஆராய அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்திற்கு விஜயம்...!

பசறை - மடுல்சீமை - ஹெக்கிரிய மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உணரப்பட்ட நிலஅதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப்பணியகத்தின் அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளனர்.

இதற்கு முன்னரும் குறித்த பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்ட நில அதிர்வு தொடர்பில் ஆராய்வதற்காக அவர்கள் அங்கு சென்றுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டார்.

மடுல்சீமை - ஹெக்கிரிய மற்றும் அதனை அண்டிய கிராமங்கள் சிலவற்றில் நேற்று அதிகாலை 3 மணியளவில் பதிவானது.

அது ரிக்டர் அளவுகோலில் 2 மெக்னிடியுட்டாக பதிவானதாக தெரிவிக்கப்படுகின்றது,

அத்துடன் கடந்த 22 ஆம் திகதி ஹெக்கிரிய மற்றும் வலப்பனை ஆகிய பகுதிகளில் இவ்வாறு நிலஅதிர்வொன்று பதிவானதோடு அது ரிக்டர் அளவுகோலில் 1 தசம் 8 மெக்னிடியுட்டாக பதிவாகியிருந்தது.

எவ்வாறாயினும் மத்திய மலைநாட்டு பகுதிகளிலும் நிலஅதிர்வு ஏற்படுவதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அது தொடர்பில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என பேராதனை பல்கலைகழகத்தின் புவிச்சரிதவியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்தார்.