கடனுடன் வாழும் ஒவ்வொரு இலங்கையர் - வெளிவந்தது விபரம்

கடனுடன் வாழும் ஒவ்வொரு இலங்கையர் - வெளிவந்தது விபரம்

இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் ரூ .670,000 (அறுநூற்று எழுபதாயிரம்) கடன் வைத்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதில் ரூ .290,000 (இருநூற்று தொண்ணூறாயிரம்) வெளிநாட்டுக் கடனாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒக்டோபர் 2020 இறுதியில், மத்திய அரசு திருப்பிச் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை ரூ. 14,605.6 பில்லியன் என்று இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தொகையில் ரூ. 8,258.9 பில்லியன் உள்நாட்டு கடன் என்பதுடன் ரூ. 6,346.7 பில்லியன் வெளிநாட்டு கடன். அதன்படி, 2020 ஒக்டோபர் மாத இறுதியில் நாட்டின் தனிநபர் கடன் ரூ. 669,981. இதில் ரூ. 291,133 வெளிநாட்டுக் கடன்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அல்லது இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் ரூ. இருநூற்று தொண்ணூறாயிரம் கடனாளியாவார்.

ஒரு நாட்டின் மொத்த கடனை நாட்டின் மொத்த மக்கள்தொகையால் வகுக்கும்போது ஒரு நபர் தாங்க வேண்டிய கடனின் அளவுதான் தனிநபர் கடன் சுமை. இலங்கை மத்திய வங்கியின் கூற்றுப்படி, நாட்டின் மக்கள் தொகை 21.8 மில்லியன் ஆகும்.