விமான போக்குவரத்து சேவைகளை அதிகரிக்கவுள்ள எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம்..!

விமான போக்குவரத்து சேவைகளை அதிகரிக்கவுள்ள எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம்..!

எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம் இலங்கைக்கான தமது விமான போக்குவரத்து சேவைகளை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளது.

தற்போது வாராந்தம் 4 விமான சேவைகளை எமிரேட்ஸ் நிறுவனம் நடத்துகிறது.

இதனை ஆறாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைகள் எதிர்வரும் 18ம்திகதி முதல் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்புக்கும் டுபாயிக்கும் இடையிலான இந்த சேவைக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், விமானபோக்குவரத்தையும் அதிகரிக்க தீர்மானித்திருப்பதாக எமிரேட்ஸ் அறிவித்துள்ளது.