இளம் தம்பதியினருக்கு ஏற்பட்ட நிலை! காரணத்தை தேடும் பொலிஸார்

இளம் தம்பதியினருக்கு ஏற்பட்ட நிலை! காரணத்தை தேடும் பொலிஸார்

இளம் தம்பதியினர் இருவர் தமக்குதானே தீ மூட்டிக் கொண்டு தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வில்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுககொல்ல பகுதியில் வீடொன்றுக்கு முன்னால் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சமத்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நுககொல்ல பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் இருவர் தீ மூட்டிக் தற்கொலைச் செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

27 வயதுடைய நபரும் , 23 வயதுடைய அவரது மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த தம்பதியினர் தற்கொலைச் செய்துக் கொண்டமைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வில்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.