பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் குறித்து மஹிந்த வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயம் குறித்து மஹிந்த வெளியிட்ட பதிவு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் வருகையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் இதை குறிப்பிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இலங்கை வரவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவருடன் விஜயம் செய்யும் குழுவினரையும் வரவேற்க எதிர்பார்த்துள்ளோம்.

பாகிஸ்தான் பிரதமரின் இந்த விஜயமானது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும்.

அத்தோடு இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் பரஸ்பர கூட்டு முயற்சிகளுக்கும் வழிவகுக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.