காவல்துறைக்கு 2,000 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

காவல்துறைக்கு 2,000 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

நாட்டில் சட்டத்தை அமுலாக்குவதற்கும் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கும் பொறுப்பான முக்கிய நிறுவனமான இலங்கை காவல்துறைக்கு தனது கடமைகளை முறையாகச் செய்வதற்கு போதுமான வாகன வசதிகள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, 2,000 முச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.