கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ஏப்ரல் 21 தாக்குதல் காலப்பகுதியில் சில தரப்பினரால் நாட்டிற்கு ஆறாயிரம் வாள்கள் கொண்டு வரப்பட்டமை தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் உடனடி விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபர் காவற்துறை மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.

சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பேராயர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட நீதிபேராணை மனு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அண்மையில் ஒத்தி வைக்கப்பட்டது.

மனு விசாரணையின் போது, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்த்தன, நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட வாள்களில் சுமார் 600 வாள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

எஞ்சிய வாள்கள் நாட்டுக்குள் உள்ளதாக அவர் நீதிமன்றத்திடம் அறிவித்திருந்தார்.

இதன்படி வாள்கள், கூரிய கத்தி உள்ளிட்ட ஆயுத இறக்குமதி தொடர்பாக விசாரணை நடத்துமாறு சட்டமா அதிபர் காவற்துறைமா அதிபருக்கு பணித்துள்ளார்