
இடைத்தரகர்களால் பதுக்கப்படும் அரிசி? கடும் எச்சரிக்கை விடுத்துள்ள அமைச்சர்!
அரிசி, இடைத்தரகர்களிடம் கையிருப்பில் வைத்திருப்பதாக தகவல்கள் கிடைத்தால் குறித்த அரிசி பங்குகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜா-எல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ச.தோ.ச விற்பனை நிலைய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
அரிசி ஆலை உரிமையாளர் அல்லது உற்பத்தியாளர் அல்லாத ஒரு இடைத்தரகரிடம் அரிசி கையிருப்பில் இருப்பது தெரியவந்தால் பறிமுதல் செய்யப்படும்.
அதேவேளை இது தொடர்பான உறுதியான தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு அறிவிக்குமாறும் தெரிவித்த அமைச்சர், அவ்வாறு பதுக்கு வைத்திருக்கும் அரிசி பங்குகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்