வவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 4 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
கைதானவர் வவுனியாவை சேர்ந்த 30 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்