
தியவண்ணா ஓயாவில் கழிவு நீர் கலப்பது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் பணிப்புரை
நாடாளுமன்ற வளாகத்தை சுற்றியுள்ள தியவண்ணா ஓயா மற்றும் பத்தரமுல்லை பகுதியில் உள்ள ஈரநிலங்களில் கழிவு நீர் கலப்பது தொடர்பில் உடனடியாக சுற்றுச்சூழல் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்கட்சியினால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கு அமைவாக, மலசலகழிவுகள் குறித்த ஓயாவில் கலந்ததற்கான எந்தவித ஆதாரங்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இதற்கு முன்னர் தியவண்ணா ஓயாவில் கழிவு நீர் கலந்திருக்கவில்லை என்பதால், அது தொடர்பிலான விஞ்ஞானபூர்வமான அறிக்கையை தாம் எதிர்பார்ப்பதாகவும் சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்