தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிக்கொணடிருந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிக்கொணடிருந்த சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்!

கிண்ணியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரை ஏக்கர் பகுதியிலேயே இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்திலேயே  ஒன்பது வயதுச் சிறுமி பலியாகியுள்ளார். 

இச்சம்பவம் இன்று காலை 9.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.  இச்சம்பவத்தில் பலியானவர் காக்காமுனை அரை ஏக்கரைச் சேர்ந்த குத்புள்ளாஹ் பாத்திமா றிஹா என கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்தனர்.  காலையில் பிரத்தியேக வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் எதிரே வந்த லொறி மோதியதில் சிறுமி பலியாகியுள்ளார். 

விபத்து இடம்பெற்றதை அடுத்து சிறுமி கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து சடலம் அங்கிருந்து பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப் பட்டுள்ளது.  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.