ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

ஆட்பதிவு திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

மக்கள் ஒன்று கூடுவதை தவிர்க்கும் நோக்கில், ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களினால் வழங்கப்படும் சேவைகள் மீள அறிவிக்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான விண்ணப்பங்களை பிராந்திய அலுவலகங்களில் வழங்க முடியுமென அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் நாட்களில், முன்பதிவு செய்து கொண்ட விண்ணப்பத்தாரர்களுக்காக தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தபால் மூலம் மேற்கொள்ளப்படும்.

அத்துடன் பரீட்சைகள் தொடர்பாக, கடவுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளல் போன்ற அவசர தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டையை பெற வேண்டுமென்றால் பிரதான அலுவலகத்தின் 0115 226 126 அல்லது 0115 226 100 என்ற தொலைபேசி எண்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

தென் மாகாணத்திற்கு 0912 228 348 என்ற தொலைபேசி இலக்கமும், வடமேல் மாகாணத்திற்கு 0372 224 337 என்ற தொலைபேசி இலக்கமும், கிழக்கு மாகாணத்திற்கு 0652 229 449 என்ற தொலைபேசி இலக்கமும், வட மாகாணத்திற்கு 0242 227 201 என்ற தொலைபேசி இலக்கமும் மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளன