கொரோனா நோயாளர்களின் நெரிசல் குறைப்பு -விசேட மருத்துவ நிபுணர் தகவல்

கொரோனா நோயாளர்களின் நெரிசல் குறைப்பு -விசேட மருத்துவ நிபுணர் தகவல்

கொரோனா நோயாளர்கள் தொடர்பாக வைத்தியசாலைகளில் ஏற்பட்ட நெரிசல் நிலை தற்சமயம் குறைக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புதிய வைத்தியசாலைகள் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த பத்து நாட்களில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையினால், வைத்தியசாலைகளில் நெரிசல் ஏற்பட்டிருந்தது.

அத்துடன், கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருக்கும் மத்திய நிலையங்களில் சிகிச்சை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் பல வைத்தியசாலைகளாக மாற்றப்பட்டுள்ளன.

இதனிடையே, நேற்றுமுன்தினம் வெளிநாடுகளிலிருந்து வருகைதந்த 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.