தொடருந்து சேவையாளர்களிடையே கொவிட் தொற்று விரைவாக பரவுகிறது!

தொடருந்து சேவையாளர்களிடையே கொவிட் தொற்று விரைவாக பரவுகிறது!

தொடருந்து திணைக்களத்தின் சேவையாளர்களுக்கிடையே கொவிட் தொற்று விரைவாக பரவல் அடைவதாக அகில இலங்கை தொடருந்து சேவையாளர்களின் பொது சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இரத்மலானை இயந்திர வேலைத்தளம் உள்ளிட்ட பல வேலைத்தளங்களில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்டதன் காரணமாக அவற்றை மூட நேரிட்டதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதன்காரணமாக அத்தியாவசிய சேவைகளை இடையூறின்றி முன்னெடுக்கும்போது, அதிகாரிகள் பாரிய பிரச்சினைகள் மற்றும் இன்னல்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

இதேநேரம், தொடருந்து நிலையங்களில் பொதுமக்களுக்கான உரிய சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதில்லை என அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

சமூக இடைவெளியை பின்பற்றி பேருந்துகளில் பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

எனினும் உரிய முறைமைகள் பின்பற்றப்படாமையினால் தொடருந்துகளில் பயணிகளை அவ்வாறு அழைத்து செல்ல முடியாதுள்ளதாக அகில இலங்கை தொடருந்து சேவையாளர்களின் பொது சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையின் 52 சேவையாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.