 
                            குவைத்தில் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்!
குவைத்தில் கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப்பெண்ணின் சடலம் நேற்று நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவர் மஹவ பகுதியைச் சேர்ந்த  ஸ்வர்ணவதி ஹேரத் என்ற 39 வயதுடையவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வீட்டுப்பணிப்பெண்ணாக அவர், குவைட் சென்றிருந்தார்.
இந்த நிலையில், மீண்டும் நாடு திரும்புவதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த ஏப்ரல் 13ஆம் திகதி எத்தியோப்பிய பிரஜை  வீட்டுப்பணினால் கொலை செய்யப்பட்டதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சடலம் மீதான பிரேத பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
ஸ்வர்ணவதி நாடு திரும்பினால், தான் தனியாக வீட்டு வேலைகளை செய்ய வேண்டியேற்படும் என்பதால் அவர் மீது கோபமடைந்து குறித்த எத்தியோப்பிய பணிப்பெண் இந்தக் கொலையை செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தொியவந்துள்ளது.
இந்நிலையில், நீதிவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் நீர்கொழும்பு பொது மயானத்தில் ஸ்வர்ணாவின் உடலை அடக்கம் செய்யுமாறு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
                     
                                            