
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தீயணைப்பு பணிக்காக இழுவை படகு அனுப்பி வைப்பு!
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் தீ பற்றியுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலின் தீயணைப்பு பணிக்காக அந்த கப்பல் உரிமையாளருக்கு சொந்தமான இழுவை கப்பல் ஒன்று குறித்த கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தீப்பரவல் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் குறித்த ஆய்வுக்காக நெதர்லாந்திலிருந்து ஆய்வுக்குழுவொன்று இன்று இரவு இலங்கை வரவுள்ளதாக அதன் உள்நாட்டு பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.
அத்துடன், கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் அதிகாரிகள் குழுவொன்று கப்பல் தொடர்பான ஆய்வில் இன்று ஈடுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.