15 மில்லியன் கொவிட் தடுப்பூசி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி

15 மில்லியன் கொவிட் தடுப்பூசி கொள்வனவிற்கு அமைச்சரவை அனுமதி

நாடு முழுவதும் கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு இந்த வருட நிறைவிற்கு முன் நாட்டின் மொத்த சனத்தொகையில் நூற்றுக்கு 60- 70 சதவீத மக்களுக்கு தடுப்பூசி செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 14 மில்லியன் சினோபாம் தடுப்பூசிகள் மற்றும் ஒரு மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு, அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.