திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஏழு கொவிட் மரணங்கள் பதிவு!

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஏழு கொவிட் மரணங்கள் பதிவு!

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஏழு கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

இதன்படி திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 69 கொவிட்-19 மரணங்கள் சம்பவித்துள்ளதாக அந்த பணியகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிண்ணியா மற்றும் தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 2 கொவிட் -19 மரணங்களும், உப்புவெளி, கந்தளாய், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா ஒவ்வொரு மரணங்களும் பதிவாகியுள்ளன.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் திருகோணமலை மாவட்டத்தில் 63 தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் இதுவரை 1,403 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.