நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர் விபரம் மாவட்ட ரீதியாக

நேற்று அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர் விபரம் மாவட்ட ரீதியாக

கம்பஹா மாவட்டத்திலேயே நேற்றைய தினமும் அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இம்மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 362 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியதோடு கொழும்பு மாவட்டத்தில் 338 பேருக்கு தொற்று உறுதியானது.

களுத்துறை மாவட்டத்தில் 339 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 194 பேருக்கும், குருணாகலில் 104 பேருக்கும், காலியில் 57 பேருக்கும் நேற்று தொற்று உறுதியாகின.

யாழ்ப்பாணத்தில் 40 பேரும், கேகாலையில் 87 பேரும், புத்தளத்தில் 34 பேரும், அனுராதபுரத்தில் 36 பேரும், மாத்தறையில் 6 பேரும், பொலன்னறுவையில் 22 பேரும், அம்பாறையில் 66 பேரும், நுவரெலியாவில் 93 பேரும் தொற்றுக்குள்ளாகினர்.

இரத்தினபுரி மாவட்டத்தில் 322 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டதுடன், ஹம்பாந்தோட்டையில் 25 பேருக்கும், பதுளையில் 20 பேருக்கும், மட்டக்களப்பில் 73 பேருக்கும், மொனராகலையில் 25 பேருக்கும், கிளிநொச்சியில் 4 பேருக்கும், முல்லைத்தீவில் 3 பேருக்கும் தொற்று உறுதியானது.

அதேநேரம் திருகோணமலையில் 17 பேருக்கும், வவுனியாவில் 2 பேருக்கும் மன்னாரில் 5 பேருக்கும் நேற்று தொற்று உறுதியான அதேநேரம் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய 32 பேருக்கும் நேற்று கொவிட்-19 தொற்று உறுதியானது.

இதன்படி நாட்டில் இதுவரை 223,638 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 188,547 பேர் குணமடைந்துள்ளனர். அதேநேரம் தொற்று உறுதியான 32,955 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.