கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 59 பேர் பலி!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 59 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 59 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,374 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 28 பெண்களும் 31 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை, நாட்டில் இன்றைய தினம் 2419 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 230,675 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 1,667 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 194,145 ஆக அதிகரித்துள்ளது.