இலங்கைக்கு இதுவரை 40 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் இறக்குமதி

இலங்கைக்கு இதுவரை 40 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட் தடுப்பூசிகள் இறக்குமதி

இலங்கைக்கு இதுவரையில் 40 இலட்சத்துக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் அடுத்தமாதம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளன.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போது இருப்பில் உள்ள தடுப்பூகளைக் கொண்டு அதிகளவில் ஆபத்துள்ள பகுதிவாழ் மக்களுக்கு தடுப்பூசிகளை செலுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த ஜனவரி 29ம் திகதி முதல் ஜுன் 17ம் திகதி வரையில் 2.39 மில்லியன் மக்களுக்கு கொவிட் தடுப்பூசியின் முதல் செலுத்துகை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த காலப்பகுதியில் 750,000 பேர் வரையில் இரண்டு செலுத்துகைகளையும் பெற்றுக் கொண்டிருப்பதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.