நாட்டில் நேற்று 1,867 பேருக்கு கொவிட் தொற்று!

நாட்டில் நேற்று 1,867 பேருக்கு கொவிட் தொற்று!

நாட்டில் நேற்று 1,867 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் 1,797 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 100 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை, 253,618 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 31,715 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேநேரம், நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 2,158 பேர் நேற்று குணமடைந்ததாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 218,998 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் மேலும் 39 கொவிட்-19 மரணங்கள் பதிவாகியுள்ளன.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால், நேற்று முன்தினம் இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக, அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, நாட்டில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,944 ஆக அதிகரித்துள்ளது.

நேற்றுமுன்தினம் உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில், 12 பெண்களினதும், 27 ஆண்களினதும் மரணங்கள் பதிவாகியுள்ளன.

30 வயதிற்கு உட்பட்ட ஆண் ஒருவரின் மரணம் பதிவாகியுள்ளதுடன் 30 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட 3 பெண்களும், 9 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

60 வயதிற்கு மேற்பட்ட 9 பெண்களும், 17 ஆண்களும் உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.