காட்டு யானை பாதுகாப்பு வேலிகளை பராமரிக்கும் தன்னார்வ படையணி திட்டத்தை குருநாகல் - அநுராதபுரத்தில் ஆரம்பிக்க திட்டம்!
காட்டு யானை பாதுகாப்பு வேலிகளை பராமரிக்கும், தன்னார்வ படையணி ஆரம்ப திட்டத்தை, குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் ஆரம்பிக்குமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
காட்டு யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு, மின்சார வேலிகளை அமைப்பது தொடர்பில், அலரி மாளிகையில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின்போது, பிரதமரினால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் தேசிய வேலைத்திட்டமாக, 1,500 கிலோமீற்றர் மின்சார வேலியை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

