காவற்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 39 வயதான நபர்...! மொரட்டுவையில் சம்பவம்

காவற்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 39 வயதான நபர்...! மொரட்டுவையில் சம்பவம்

மொரட்டுவை - லுனாவயில் காவற்துறை கடமைக்கு இடையூறுவிளைவித்த குற்றச்சாட்டில் 39 வயதான ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

காவற்துறை பேச்சாளர் இதனைத் தெரிவுத்துள்ளார்.

நேற்று இரவு 12.25 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்த அங்குலான காவல்துறையின் அதிகாரிகள் மூன்று பேர், திடீர் வீதித் தடைகளை ஏற்படுத்தி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்தியபோது, அதில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது காவல்துறையினரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியபோது, காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக காவல்து பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து காவற்துறை அலுவலர்களை பிரதேச மக்கள் சுற்றிவளைத்துள்ளனர்.

இந்த நிலையில் பிரதேசத்தில் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.