அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு!

அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு!

அனைத்து அரச ஊழியர்களையும் வழமை போன்று சேவைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

அதற்கமைய, சுகாதார வழிகாட்டல்களின் கீழ் எதிர்வரும் ஆகஸ்ட் 2ஆம் திகதி முதல் வழமை போன்று அரச ஊழியர்கள் கடமைக்கு சமூகம் அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ஊழியர்களை கொண்டு அத்தியவசியமான அரச பணிகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து சுற்றுநிருபங்களும் ரத்து செய்யப்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.