நேற்று 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நேற்று 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது

நாட்டில் நேற்று 244,463 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

இதற்கமைய, 24,658 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசியும், 207,787 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

3,055 பேருக்கு அஸ்ட்ராசெனகா முதலாம் தடுப்பூசியும், 296 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அதேநேரம், 237 பேருக்கு மொடர்னா முதலாம் தடுப்பூசியும், 270 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

7,573 பேருக்கு பைஸர் முதலாம் தடுப்பூசியும், 587 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.