
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு - இரண்டு பெண்கள் உட்பட மூவர் கைது
தலவத்துகொட பகுதியில் விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது.
சீதுவ மற்றும் தங்காலை பகுதிகளைச் சேர்ந்த 46,39 ஆகிய வயதுகளையுடைய பெண்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட மூவரும் இன்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.