பெண்களை பாலியல் தொழிலுக்காக விற்பனைசெய்யும் மற்றுமொரு இணையத்தளத்தின் நிர்வாகி கைது

பெண்களை பாலியல் தொழிலுக்காக விற்பனைசெய்யும் மற்றுமொரு இணையத்தளத்தின் நிர்வாகி கைது

இரத்தினபுரி - கலவானை பகுதியில் இணையத்தளத்தின் ஊடாக பெண்களை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்துவந்த மற்றுமொரு இணையத்தளத்தை நடத்திச்சென்ற சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று(16) குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, கல்கிசையில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் தொழிலுக்காக இணையத்தளத்தில் விற்பனை செய்த சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த சம்பம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணைகளையடுத்தே குறித்த இணையத்தளத்தின் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

கல்கிசையில் பதிவான 15 வயது சிறுமியின் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பாக இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.