
14 வயது சிறுவன் தூக்கிட்டுத் தற்கொலை
மன்னார் - இலுப்பகடவை பகுதியில் 14 வயது சிறுவன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான்.
தாய் இல்லாத நேரத்தில் வீட்டின் பூஜை அறையில் குறித்த சிறுவன் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக இலுப்பகடவை பொலிஸார் தெரிவித்தனர்.
சில காரணங்களால் இளைஞர்கள் சிலர் வீட்டுக்கு வந்து சிறுவனை திட்டியதால் சிறுவன் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் உடல் மன்னார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை இலுப்பகடவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.