
நடை பயிற்சிக்காக சென்றவர் கிணற்றில் சடலமாக மீட்பு
கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில், 2 நாட்களின் பின்னர் நவாலியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து நேற்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் சண்டிலிப்பாயை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் (வயது-51) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணி தொடக்கம் அவரைக் காணவில்லை என குடும்பத்தினர் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியிருந்தனர்.
இந்நிலையில் 2 நாட்களின் பின்னர் அவர் நவாலிப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மன விரத்திக்குள்ளாகிய நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.