6 கோடிக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டன
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் படகொன்றிலிருந்து 229 கிலோ 350 கிராம் நிறைகொண்ட கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் இன்று(21) கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளின் மொத்த பெறுமதி 6 கோடியே 80 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.