நீரில் மூழ்கி இளைஞன் பலி

நீரில் மூழ்கி இளைஞன் பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் மீன்பிடிக்க சென்று படகு கவிழ்ந்து நீரில் மூழ்கிய நிலையில் இளைஞர் ஒருவர் காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில் அவரை கிராம மக்கள் பொலிசார் இராணுவத்தினர் என பல்வேறு தரப்பினராலும் தேடுதல் மேற்கொண்டுவந்த நிலையில் குறித்த இளைஞனின் உடலம் மீட்கப்பட்டு மாங்குளம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

. 24 வயதுடைய 5ம் கட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த விஜயரட்ணம் நிலவன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.