
இந்த ராசிக்காரங்ககிட்ட உஷாராவே இருங்க: பயங்கர மோசமானவாங்களாம்!
இந்த ராசிக்காரர்கள் தங்கள் தவறை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இந்த ராசிக்கு உரியவர்களுக்கு வம்பும் வழக்கும் எப்போதும் தொடரும் காரணம் இதுதான்...
12 ராசிகளின் குணாதிசயங்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் ஜோதிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ராசிக்காரர்களின் இயல்பும் எண்ணங்களும் வித்தியாசமாக இருக்கும். இதற்கு காரணம் ராசிகளின் அதிபதி தான்.
பன்னிரண்டு ராசிகளில் சில ராசிக்காரர்கள் தங்கள் தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது மட்டுமல்ல, மற்றவர்களால் இழிவுபடுத்தப்படுவதை இந்த ராசிக்காரர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
கும்பம்
கும்பம் சவாலை விரும்பும் ராசி. கடின உழைப்பால், இந்த ராசிக்காரர்கள் (Zodiac sign) வாழ்க்கையில் நிறைய சாதிப்பார்கள். ஆனால், தாங்கள் செய்வது அனைத்தும் சரியானதே என்ற பிடிவாதம் கொண்டவர்கள் கும்ப ராசிக்காரர்கள்.
கும்ப ராசிக்காரர்கள் தவறு செய்து அதை யாரேனும் சொன்னால், அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அதற்காக சண்டைக்கு போகவும் தயங்கமாட்டார்கள். இருப்பினும், கோபம் தணிந்தவுடன், அவர்கள் தங்கள் தவறுக்கு வருந்துவார்கள். ஆனால் தன்னுடைய தவறை பிறர் முன் ஒப்புக் கொள்ள மாட்டார்கள்.
மேஷ ராசி
மேஷ ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள் என்றாலும், அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தைப் பற்றி அதிக பெருமைப்படுவார்கள். தாங்கள் செய்வது முற்றிலும் சரியானது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லாதவர்கள்.
தங்கள் பிரச்சினைகளில் மற்றவர்கள் தலையிடுவதை அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். அதுமட்டுமின்றி இந்த ராசிக்காரர்கள் தங்கள் தவறை ஒருபோதும்ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு முடிவையும் அவசரத்தில் எடுப்பார்கள். பொறுமையாக செயல்படவேத் தெரியாதோ என்று நினைக்கும் அளவுக்கு வேகக்காரர்கள். அதிக உற்சாகமான ராசிக்காரர்களும் இவர்கள் தான்.
எந்த ஒரு வேலையையும் தங்கள் விருப்பப்படி செய்ய விரும்புபவர்கள். இது அவர்களது வேலை எந்த தடையும் இல்லாமல் முடிக்க உதவியாக இருக்கும். ஆனால், யாரேனும் தங்கள் தவறை சுட்டிக்காட்டினால், மூக்கு மேல் கோபம் வந்துவிடும்.