கொவிட் மரணங்கள் குறித்து வௌியான அறிவிப்பு

கொவிட் மரணங்கள் குறித்து வௌியான அறிவிப்பு

நாட்டில் நேற்றைய தினம் (17) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 3 பேர் மாத்திரம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 16,422 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 5,247 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 இலட்சத்து 24ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் தற்போது 16 ஆயிரத்து 278 பேர் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இதுவரையிலும் இலங்கையில் 6 இலட்சத்து 57 ஆயிரத்து 134 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.