லங்கா ஐஓசியிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசல் கொள்வனவு!

லங்கா ஐஓசியிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசல் கொள்வனவு!

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ், இலங்கைக்கு டீசல் கிடைக்கும் வரை லங்கா ஐஓசியிடமிருந்து 6,000 மெட்ரிக் டன் டீசலைக் கொள்வனவு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் காமினி லொக்குகே இதனை தெரிவித்தார்.

அதற்கமைய அத்தியாவசிய சேவைகள் மற்றும் மின் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு இவ்வாறு டீசல் கொள்வனவு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் டீசல் உடன் வருகை தரும் கப்பல் நாளை இலங்கையை வந்தடையும் வரை மேற்படி நடவடிக்கைகளுக்காக இந்த டீசல் தொகை கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அமைச்சர்  மேலும் குறிப்பிட்டார்.