வணிக வங்கிகளில் டொலரின் பெறுமதி இன்று மேலும் உயர்வு
பல அனுமதிபெற்ற வணிக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 360 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாளுக்கு நாள் டொலரின் பெறுமதி உயர்ந்து வருகின்றமையே கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, மத்திய வங்கியினால் நேற்று (27) வெளியிடப்பட்ட நாணயமாற்று விகிதங்களின்படி டொலரின் விற்பனை பெறுமதி 350 ரூபா 49 சதமாகவும் கொள்முதல் விலை 337 ரூபா 82 சதமாகவும் பதிவாகியிருந்தது.