காலி முகத்திடலில் போராட்டகாரர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

காலி முகத்திடலில் போராட்டகாரர்களுக்கு காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கை

காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு காவல்துறையினர் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

நாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் 2 ஆவது சரத்தின் பிரகாரம் கடந்த மே 6 ஆம் திகதி முதல் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

அவ்வாறே, பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16ஆம் சரத்தின் கீழ் நாடு முழுவதும் மே 9 ஆம் திகதி மாலை 7 மணி முதல் நாளை காலை 7 மணிவரை ஊரடங்கு சட்டம் அமுலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியொருவரின் எழுத்துமூல அனுமதியின்றி பொது வீதிகள், தொடருந்து மார்க்கங்கள், பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் அல்லது வேறு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் இருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனை மீறி காலி முகத்திடலில் 'கோட்டா கோ கம' என்ற பெயரில் முகாம் அமைத்து போராட்டத்தை நடத்துவது சட்ட விரோதமானது என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

மேற்படி போராட்டம் இடம்பெறும் பகுதியில் ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.