பலப்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை

பலப்பிட்டிய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் கொலை

பலப்பிட்டிய - படபொல - மானம்பிட்ட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு நண்பர் ஒருவரின் வீட்டில் பிறிதொரு குழுவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், வீட்டின் உரிமையாளர் அவரை தாக்கியுள்ளதாக காவல்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.