அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 17 பேருக்கு நேர்ந்த கதி!
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக படகு ஒன்றில் செல்ல முற்பட்ட 17 சந்தேக நபர்களை அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று (20) உத்தரவிட்டார்.
திருகோணமலை, மட்டக்களப்பு, கல்முனை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்ப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற போதே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் இன்று (20) காலை ஒப்படைக்கப்பட்டனர்.
பொலிஸார் சந்தேக நபர்களை திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.